இட்லி வியாபாரி வீட்டின் கதவை திறந்து 20 கிராம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அடுத்துள்ள கொமந்தபுரம் பொன்னப்பன் கோவில் தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பையா மனைவி மாரீஸ்வரி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டிற்கு வெளியே இருந்த மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு வழக்கம்போல இட்லி கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பையா வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 கிராம் நகை திருடு போயிருந்துள்ளது. இதுகுறித்து சுப்பையா உடனடியாக தளவாய்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திய வேந்தன் வழக்குபதிவு செய்து இட்லி வியாபாரி வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.