Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் அட்டகாசம்…. 3 பேர் மீது வழக்கு…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுபோதையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஊராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மண்டலவடி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு 6 வார்டுகளுக்கு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அப்போது பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்களிக்க பொதுமக்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |