Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து பிற அரசியல் கட்சியினர் மற்றும் நாளிதழ்கள் தமிழக அரசு சார்பில் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

அதனால் அவர்கள் மீது போடப்பட்ட 52 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நாஞ்சில் சம்பத், ‘நக்கீரன்’ கோபால், அறம் போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ், ‘முரசொலி’ செல்வம், ‘தி இந்து’ சித்தார்த் வரதராஜன், பத்மநாபன், டைம்ஸ் ஆப் இந்தியா சுனில் நாயர், கார்த்திகேயன், ஹேமலதா, ‘நவீன நெற்றிக்கண்’ ஏ எஸ் மணி,’தினகரன்’ஆர். எம்.ஆர் ரமேஷ் மற்றும் எகனாமிக் டைம்ஸ் வசுதா வேணுகோபால் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் முக ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் கடந்த ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு பதிவு நேற்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர் செல்வகுமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன்,கடந்த ஆட்சியில் போடப்பட்ட 52 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய அரசாணையை வெளியிட வேண்டும் என்று அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தாக்கலை நீதிபதி ஆர். செல்வகுமார் ஏற்றிக்கொண்டு 52 வழக்குகளையும் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |