கல்லின் மீது தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய ராஜா என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் குழந்தை ராஜா விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா தவறி கல்லின் மீது விழுந்து விட்டான்.
இதனால் படுகாயமடைந்த குழந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.