கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முருகன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.