Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. எரிந்து நாசமான பொருட்கள்…. பல மணி நேர போராட்டம்…!!

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளமுத்துக்காளிவலசு பகுதியில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில் இருந்து புகை வந்துள்ளது. அதன் பிறகு திடீரென கலன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பருப்புகள் மற்றும் சூடுபடுத்தும் கலன் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |