கரும்புத் தோட்டத்தில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டாபுரம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது 4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருக்கிறார். அதன்பின் அதை வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மலைப்பாம்பு ஒன்று கரும்பு தோட்டத்தில் படுத்துக் கிடந்ததை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இது குறித்து அமிர்தலிங்கம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த மலைப்பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளனர். மேலும் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு 12 அடி நீளம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.