மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.54 கோடி கல்விக் கடன் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சு.வெங்கடேஷ் எம்.பி கூறியுள்ளார். இது குறித்து அவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் கல்வித்துறை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில் கூடுதல் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி மதுரை மாவட்டத்தில் இதுவரை கல்வி கடன் கேட்டு 818 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 625 மாணவர்களுக்கு மட்டும் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 126 மனுக்கள் பரிசீலனை மற்றும் 64 மனுக்கள் சரியான ஆவணங்கள் இணைக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்னும் அதிகமான மாணவர்கள் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று சிறப்பு கடன் முகாம்களை நடத்தப்பதுவது குறித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் அடுத்த கட்ட ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.