நெல் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கலப்பு தெரியாமலிருக்க தொழிலாளர்கள் பாட்டு பாடி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர் பாசனத்தின் மூலம் கீழ்பவானி பகுதியில் சுமார் இரண்டு இலட்சம் ஏக்கரும், பாசனம் வயல்கள் மூலமாக சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்ற நிலையில் இந்த 2 பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெறுவதற்கு வாய்க்கால் மூலமாக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்பின் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் தண்ணீர் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் சாகுபடிக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து நாதிபாளையம் உள்பட எட்டுப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் முதல் போக சாகுபடிக்காக நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆலங்காட்டுபுதூர் பகுதி உள்பட 2 இடங்களில் பெண்கள் களைப்பு தெரியாமலிருக்க நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாடலுக்கு ஏற்றவாறு ஒரு சிலர் குலவை சத்தம் எழுப்பியும் நெல் நடவு செய்துள்ளனர்.