ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தினை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்க இருப்பதாகவும், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இந்த படத்தினை அடுத்த ஆண்டுக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
We’re excited to announce our next film with @hiphoptamizha Adhi to be directed by Maragatha Naanayam fame @ArkSaravan_Dir. pic.twitter.com/EKyf1dLzkG
— Sathya Jyothi Films (@SathyaJyothi) October 8, 2021