எச்.ராஜா, சீமான் அரசியலில் சாபக்கேடு என ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார்.
சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜெயக்குமார், சீமான் இப்படி கொச்சையாக பேசுவது நாட்டினுடைய ஜனநாயகத்திற்கு ஆபத்து, அவர் நடைமுறை நாகரிக அரசியலை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியை சந்தித்து மனு கொடுத்திருக்கின்றோம். மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு அவர்கள் எங்களிடத்தில் 15 நிமிடத்திற்கும் மேலாக விசாரித்து, நாங்கள் கண்டிப்பாக இதன் மீது நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்திருக்கிறார்.
சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்காவிட்டால் எங்களுடைய கடந்த கால மனு கிடப்பில் போட்டது போன்று நடவடிக்கைகள் இருந்தால் எங்களுடைய காங்கிரஸ் தலைமையோடு நாங்கள் ஆலோசித்து இது போன்றவர்கள் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இயக்கமும், காங்கிரஸ் தொண்டர்களும் உரிய அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.
சீமான் மீது இப்படி பேசுவதற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.பி ஜெயக்குமார், யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று, நாங்கள் சந்தித்த டிஜிபியிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்கவேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் இப்போது சந்தித்து வந்திருக்கின்றோம். இந்த முறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எச்.ராஜா, சீமான் இந்த இரண்டு பேருமே அரசியலில் ஒரு சாபக்கேட. நன்றாக நடந்து கொண்டிருக்கின்ற இந்த அரசியலில் அசிங்கத்தை வாரி தெளிக்கின்ற அயோக்கியத்தனமான பேச்சை பேசுபவர்கள் என தெரிவித்தார்.