Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஒலித்த அலாரம்….. ராணுவ வீரரிடம் இருந்த பொருள்….. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

ராணுவ வீரரின் சூட்கேசில் துப்பாக்கி தோட்டா இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் செல்வதற்காக வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது விக்னேஷ் என்பவரிடம் அபாயகரமான பொருள் இருப்பதாக அலாரம் ஒலித்துள்ளது. இதனால் அவரது சூட்கேசை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது ராணுவ உடையில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தான் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருவதாகவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு பணிக்கு திரும்புவதால் தெரியாமல் துப்பாக்கி தோட்டா வந்திருக்கலாம் எனவும் விக்னேஷ் தெரிவித்துள்ளார். அதன் பின் அதிகாரிகள் அவரது விமான பயணத்தை ரத்து செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் தோட்டாவை பறிமுதல் செய்து விக்னேஷை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |