தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கி இன்று வெளியாகும் திரைப்படம் டாக்டர். ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படம் வெளியாவதாலும் இதனுடன் போட்டிக்கு வேறு எந்த படங்களும் வெளியாகாததாலும் பல இடங்களில் அதிக தொகைக்கு டாக்டர் விற்பனையாகியுள்ளது.
45 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டாக்டர் படம் OTT உரிமை, சாட்டிலைட் உரிமை என மொத்தமாக 62.60 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள தகவல் படி லாபம் கிடைத்திருந்தாலும் படம் வெளியான பிறகுதான் முழு தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.