மதுரையில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று கூறி அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேட்டு தெருவில் வசித்து வருபவர், குருநாதன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். TN68 L1374 என்ற பதிவு எண் கொண்ட ஆட்டோவை முறையான சாலை பர்மிட் வாகன காப்பீட்டு ஆவணங்களை சரியாக பராமரித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆட்டோவிற்கு மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துருப்பது ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில குழு உறுப்பினர் பார்த்தசாரதி கூறும்போது, அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் எப்போதும்போல் சவாரி செய்வதற்காக கும்பகோணம் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் நிரப்பும் போது அவர் கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சென்றுள்ளதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும், ஹெல்மெட் போடவில்லை என்றும், ரூபாய் 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனர், இது முற்றிலும் பொய் வழக்கு இது காவல்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இதுபற்றி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பொய் வழக்கு சம்பந்தமாக புகார் அளிக்க உள்ளதாகவும், இதனை கையாண்ட மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய கோரியும், சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு ஆவணமாக தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.