Categories
உலக செய்திகள்

தயாரிக்கப்படும் டிஜிட்டல் அட்டைகள்…. இலங்கை அரசு நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட தொழிநுட்ப அமைச்சக செயலாளர்….!!

தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலை இலங்கை அரசின் தொழிநுட்ப அமைச்சகத்தின் செயலாளரான ஜயந்த டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ICTA Chairman Jayantha De Silva appointed Technology Ministry Secretary -  The Morning - Sri Lanka News

அதில் “இரு தவணை தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் தற்பொழுது துவக்கப்பட்டுள்ளன. இது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பரிந்துரை மட்டும் குறியீட்டின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது.

மேலும் எவரும் போலியான அட்டையை தயாரிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் டிஜிட்டல் அட்டைகள் தயாரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |