Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலை தூக்கும் “பவர் கட்”… பல மணி நேரம் இருளில் தவிக்கும் மக்கள்… அதற்கு இதுதான் காரணமாம்….??

கர்நாடகாவில் முன்னறிவிப்பு இன்றி நீண்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருகிறது. அதுவும் முன்னறிவிப்பு எதுவுமின்றி பலமணிநேரம் துண்டிக்கப் படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவால் தொழில் முடக்க நிலையில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது மின்சார துண்டிப்பால் தொழில் முடக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும் பட்சத்தில் மின் உற்பத்திக்கு தேவையான அளவு நிலக்கரி கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். கர்நாடகாவின் ராய்ச்சூர், பெல்லாரி, ஏர்மாரூஸ் என 3 மிகப்பெரிய நிலக்கரி மின் உற்பத்தி தளங்கள் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் மொத்தமாக 5020 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 11 ரேக்குகள் நிலக்கரி தேவைப்படுகிறது.

அதாவது ஒரு ரேக் என்பது 4000 டன் என்று அர்த்தம் ஆனால் வெறும் 6 ரேக்குகள் மட்டுமே நிலக்கரி கிடைப்பதால் மின் உற்பத்தி பாதிப்படைவதாக கூறியுள்ளனர். 1720 மெகாவாட் திறன் கொண்ட ராய்ச்சூர் மின்உற்பத்தி தளத்தில் வெறும் 640 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 1700 மெகாவாட் மின் திறன் கொண்ட பெல்லாரி மின்னுற்பத்தி தளத்தில் நாளொன்றுக்கு வெறும் 432 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் ஆயிரத்து 1600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஏர்மாரூஸ் உற்பத்தி தளத்தில் வெறும் 635 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

இது தொடர்பாக கர்நாடக பவர் கார்ப்பரேஷன் கோலபில்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் வி.பொண்ணுராஜ் கூறுகையில், மகாநதி கோலபில்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கூடுதலாக நிலக்கரி பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். 1500 மெகாவாட் மின் திறன் கொண்ட சோலார் யூனிட்டில் இருந்து வெறும் 726 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சென்ட்ரல் கிரிட்டில் இருந்து கிடைக்கக்கூடிய 4415 மெகாவாட் மின்சாரம் ஆனது 2500 ஆக குறைக்கப்பட்டு விட்டது. விரைவில் நிலைமை சீரடையும் என்றும் போதுமான அளவு மின்சாரம் பெறப்படும் என்றும், மாநில ஆற்றல் துறை அமைச்சர் வீ சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |