காஞ்சிபுரம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி கணவர் இறந்த துக்கத்தில் அவரது இளம் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ரிஷித்தா ஆகியோருக்கு திருமணம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாது அவரது மனைவி ரிஷித்தா சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிவில் கணவரின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்தபொழுது மனமுடைந்து மனைவியும் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.