ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல செய்தி நிறுவனம் ஒன்று ஆப்கானிஸ்தானில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில் மசூதி ஒன்றில் 100 பேர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் சமீபகாலமாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பே கொடூரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் அமெரிக்கா மற்றும் நோட்டா கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு இதுவே அந்நாட்டில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.