Categories
மாநில செய்திகள்

BREAKING: பொறியியல் மாணவர் சேர்க்கை…. 72 கல்லூரிகளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப் படாமல் இருந்தன. அதன்பிறகு கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் பொறியியல் படிப்பில் ஏறுவதற்கு மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த மாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கல்வியாளர் அஸ்வின் மேற்கொண்ட ஆய்வில், 131 பொறியியல் கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் 1.51லட்சம் இடங்கள் உள்ள நிலையில் இதுவரை 33 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. பொறியியல் மாணவர் சேர்க்கையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |