திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பிரகாஷ்(31) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 15 வயது சிறுமி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது பிரகாஷ் என்பவர் கணக்கு பாடம் சொல்லித் தருவதாகக் கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே மாரிமுத்துவிடம் கூறியுள்ளனர்.
இதுபற்றி அச்சிறுமியிடம் மாரிமுத்து கேட்டுள்ளார். அவருக்கு அச்சிறுமி பிரகாஷ் என்பவர் பாலியல் தொந்தரவு செய்கிறார் என்று அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து நாமக்கல் அரசு மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.