Categories
தேசிய செய்திகள்

கைது செய்யப்படுவாரா?… லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு…. ஒன்றிய அமைச்சர் மகன் ஆஜர்!!

உ.பி லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த வன்முறையில் மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர்.. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. இதையடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த சம்பவம் தொடர்பாக ஆஜராகி பதிலளிக்க உ.பி காவல் துறையினரால் சம்மனும் அனுப்பப்பட்டது.. ஆனால் அவர் ஆஜராகவே இல்லை.. இந்த நிலையில் லக்கிம்பூர் பகுதியில் இருக்கக்கூடிய குற்றவியல் அலுவலகத்தில் ஆசிஷ் மிஸ்ரா ஆஜராகியுள்ளார்..

முன்னதாக நேற்றைய தினம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்திரபிரதேச காவல்துறைக்கும், அரசுக்கும் கடுமையான அதிருப்தியை  தெரிவித்திருந்தது. குறிப்பாக உச்சநீதிமன்றம், நேற்று ஆசிஷ் மிஸ்ராவுக்கு எதிராக ஐபிசி 302ன்  கொலை முயற்சி குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டிருக்க கூடிய நிலையில், சாதாரணமானவர் இப்படியான வழக்குகளை சந்திக்கிறார் என்றால் அவருக்கு சம்மன் அனுப்பி  கொண்டிருப்பீர்களா? அவரை கைது செய்திருக்கமாட்டீர்கள் என கடுமையாக சாடியிருந்தது..

இதைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் இரண்டாவது முறையாகவும் சம்மன் அனுப்பப்பட்டது.. வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருந்தது.. இன்று 11 மணிக்கு அவர் ஆஜராகவில்லை என்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் நேற்றைய தினமே உத்திரபிரதேச காவல்துறை கூறிய நிலையில், சரியாக 10:30 மணியளவில் ஆஜராவதற்காக வந்தார்.. அவர் வழக்கறிஞருடன் வந்திருக்கிறார்..

நேற்றைய தினமே மத்திய உள்துறை இணை அமைச்சர் தனது மகன் உத்தரபிரதேச காவல் துறையில் நாளைய தினம் விளக்கங்களை அளிப்பார் என்று கூறியிருந்தார்.. அதன்படியே தற்போது அவரும் வந்திருக்கிறார்.. காவல்துறையினர் ஆசிஷ் மிஸ்ராவிடம் விசாரணை செய்து விட்டு அவரை கைது செய்யப்படுவார்களா? அல்லது விளக்கங்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவரை விடுவார்களா என்று தெரியவில்லை..

 

Categories

Tech |