Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இறந்த தாய் பிழைத்து வர…. தாயின் உடலை வைத்து…. 3 நாட்கள் பிரார்த்தனை செய்த மகள்கள்…. பரபரப்பு….!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் மூதாட்டி மேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி என இரு மகள்கள் உள்ளனர். மேரி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார். ஆனால் அவரின் இரு மகன்களும்  அவரின் உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி உள்ள மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரின் இரு மகள்கள் வீட்டிற்கு உள்ளே  வர மறுத்தனர். உடனே போலீசார் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதவியுடன் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று போது எந்த வித அசைவு இல்லாமல் மூதாட்டி உடல் படுக்கையில் இருந்தது.

அதன்பிறகு மகள் இருவரும் தாய் மேரி கோமா நோயில் இருப்பதால் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக கூறினார்கள். இதனையடுத்து வருவாய் வட்டாட்சியர் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கு வைத்து மேரியின் உடலை பரிசோதனை செய்த போது அவர் உயிருடன் இல்லை என்பதை உறுதிசெய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேரியின் மகள் இருவரும் தனது தாய் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்று மேரியின் உடலை தர மறுத்து அழுது, புலம்பி சத்தம் போட்டனர். அதன்பிறகு போலீஸ்கள் கொட்டும் மழையில் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக மேரியின் இரு மகள்களையும் சமாதானப்படுத்தி அவரின் உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த தாயின் உடலை மூன்று நாட்கள் வைத்து, தாய் மீண்டும் உயிருடன் மீண்டு வருவார் என்று மகள்கள் இருவரும் பிரார்த்தனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |