Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

சாப்ட்வேர் இன்ஜினியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் அகிலா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடித்து விட்டு அகிலா தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து அகிலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |