Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்கூட வர மாட்டியா….? முகத்தில் ஆசிட் வீசிய கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடும்ப தகராறில் மனைவியின் மீது கணவர் கழிவறை கழுவும் ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் பெயிண்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமிழரசி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனை அடுத்து முருகன் தனது மனைவி தமிழரசி நடத்தி வரும் செல்போன் கடைக்கு அடிக்கடி சென்று தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த முருகன் கழிப்பறை கழுவ பயன்படுத்தும் ஆசிட்டை தமிழரசியின் முகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அதன் பிறகு  தமிழரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |