Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி” படப்பிடிப்பு முடிந்தது…. இயக்குனர் அளித்த தகவல்….!!

இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ள ரஜினி திரைப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மகாபிரபு’, ‘சாக்லேட்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ்.  இவர் தற்போது இயக்கி வரும் படத்திற்கு ரஜினி என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக விஜய் சத்யாவும் கதாநாயகியாக செரினும் நடித்திருக்கின்றனர்.இந்த படத்தை வி.பழனிவேல் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை பற்றி இயக்குனர் வெங்கடேசன் கூறும்போது, இந்தப் படம் அதிரடி சண்டை மற்றும் திகில் கலந்த படம் என்று தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் கதாநாயகன் விஜய் சத்யா ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் எனவும் அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் திரைக்கதையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கதாநாயகனுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாயும் நடித்துள்ளதாக கூறினார்.

Categories

Tech |