ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை ஆதரித்த ஹிருத்திக் ரோஷனை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார்.
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘வாழ்க்கை பல பிரச்சனைகளை தரக்கூடியது. வலிமையானவர்களுக்கு தான் கடவுள் சிக்கல்களை கொடுப்பார். நீ உனக்குள் இருக்கும் ஹீரோவை வெளிக்கொண்டு வர வேண்டும். நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை அனுபவங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்து பிரச்சினைகளை கடந்து வெற்றி பெறுவாய்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் ஹிருத்திக் ரோஷனை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘அனைத்து மாபியா பப்புகளும் ஆர்யன் கானை பாதுகாக்க வந்துவிட்டனர். அவர் தவறு செய்துள்ளார். தவறு செய்த பலர் திருந்தி நல்ல இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர். ஆரியன் கானுக்கு இந்த சம்பவம் ஒரு புதிய கோணத்தை காட்டியிருக்கும் . கஷ்டத்தில் இருக்கும் ஒருவரைப் பற்றி கிசுகிசுக்கள் பேசுவது தவறு. அதைவிடத் தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் செல்வதாக கூறிக் கொண்டு அவர்கள் தவறு செய்யவில்லை என்பதை உணர வைப்பது கிரிமினல் குற்றம்’ என தெரிவித்துள்ளார்.