தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதுவரை தமிழகத்தில் 17, லட்சத்து 19, ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை 5 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1800 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. அதனால் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்கள் தங்களுடைய பங்கை அளிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.