Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு…. முகாந்திரம் இருக்கிறது…தமிழ்நாடு அரசு பதில் மனு!!

ராஜேந்திரபாலாஜி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த காலத்தில்  2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளிக்கப்பட்டது..  ஆனால் அந்த புகார் எதுவும் சரியாக விசாரிக்கப்படவில்லை எனக்கூறி மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்..

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.. இதனால் இந்த வழக்கு 3ஆவது நீதிபதியின் அமர்விற்கு மாற்றப்பட்டிருந்தது.. வழக்கை விசாரிக்கும் 3ஆவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமனம் செய்யப்பட்டார்.. இவ்வாறு மாற்றப்பட்ட திற்கு எதிராகவும், விசாரணைக்கு தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது..

இந்த வழக்கானது கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான அந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர்.. தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.. அதில், இந்த வழக்கில் உரிய முகாந்திரம் இருக்கிறது.. எனவே தான் லஞ்ச ஒழிப்புத் துறையால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.. ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முகாந்திரமும் இருக்கிறது..

எனவே தொடர்ந்து மேற்கொண்டு இந்த வழக்கை விசாரித்தால் மட்டும்தான் மேற்கொண்டு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை எல்லாம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.. எனவே சென்னை உயர்நீதிமன்றம் தடைக்கு நீங்கள் விலக்கு அளிக்க வேண்டும். எனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் விதித்த இடைக்காலத் தடையை நீக்குவதோடு ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |