Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இந்த மாதிரி கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’… ரகுல் பிரீத் சிங்…!!!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் பிரீத் சிங். தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டியில் ‘தெலுங்கில் நான்கொண்ட போலம் என்ற படத்தில் ஆடு மேய்க்கிற பெண்ணாக நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. நான் காடுகளில் ஆடுகளை மேய்க்கும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சென்றது. அவற்றை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது. அந்த படத்தில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.

Rakul Preet Singh appears as witness in ED money laundering  probe-Entertainment News , Firstpost

அப்போதுதான் ஆடு, மாடு மேய்ப்பவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டேன். ஓடிடி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. நான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விருப்பம். இவ்வளவு நாட்களாக நடித்துவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்காமல் இருப்பது சரியல்ல. கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஒரு படம் நடித்தால் வாழ்நாள் முழுவதும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். மேலும் பாகுபலி போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம்’ என கூறியுள்ளார்.

Categories

Tech |