எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு அதிமுக தொண்டர்கள் ஒத்துழைக்காதீர்கள் என நீக்கப்பட்ட புகழேந்தி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பாமக சொன்ன அதிமுக தலைமை சரியில்ல என்ற கருத்தை நீங்கள் எப்படி பார்க்குறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி,பாமக இதைவிட அசிங்கமா எல்லாம் சொன்னார்கள், டயர் நக்கி என சொன்னார்கள், ஜெயலலிதாவிற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் பழனிசாமி என்று சொன்னார்கள், இவருக்கு என்ன பைனான்ஸ் பற்றி தெரியும் ? இவரெல்லாம் முதலமைச்சர் ஆகி என்ன பண்ண போறாருன்னு, பியூனுக்கு கூட லாயக்கில்லை என்று சொன்னாரு அந்த வார்த்தைகளை எல்லாம் தாங்கி கொண்டவர்கள் இந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்ள மாட்டார்களா ?
அதனால அது ஒரு பெரிய விஷயமே கிடையாது. இப்ப பிரச்சினை என்னவென்றால் பாட்டாளி மக்கள் கட்சி எடுத்திருக்கும் முடிவை பாராட்ட வேண்டும். ஏனென்றால் அதிமுகவை விட அதிகம் வெற்றி பெறணும் என முடிவெடுத்துள்ளனர். அப்படி பாமக வெற்றி பெற்றால், நாடாளுமன்ற சீட் 10 கேட்பார்கள்.இதனால் அதிமுக 10 சீட் கொடுக்கும், பாஜகவுக்கு பத்து சீட்டு, வேற எல்லாத்துக்கும் ஒரு பதினைந்து சீட்டுக் கொடுத்து விட்டு, இவர்கள் 39ல் 8 சீட் 10 சீட்டில் நிற்கிற நிலைமைக்கு கட்சி போய்விடும்.
இப்படித்தான் கட்சி அழியும், வேறு வழியே கிடையாது. எல்லாமே அம்மா கொள்கைக்கு நேர் மாறாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்களை வணங்குகிறேன் நீங்கள் குறிப்பாக இந்த தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒத்துழைக்காதீர்கள் என்பது தான் எனது அன்பான வேண்டுகோள் என தெரிவித்தார்.