தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
அதாவது பத்தாம் தேதி நாளைக்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை பொருத்த வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது .