பிரிட்டனில் ஒரு காவல்துறை அதிகாரி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
பிரிட்டனில் காவல்துறை அதிகாரியான Wayne Couzens, சாரா என்ற இளம்பெண்ணை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே நாட்டில் பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டத்தை, BT என்ற தொலைதொடர்பு நிறுவன குழுமத்தின் தலைமை அதிகாரி Philip Jansen அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி, தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்காக 888 என்ற எண், கிறிஸ்துமஸ் சமயத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தால், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு முகவரி போன்ற தகவல்களை கொண்டு பயணம் மேற்கொள்ளும் பெண்ணின் பயணம் டிராக் செய்யப்படும்.
அவர் சரியான நேரத்திற்கு வீடு திரும்பவில்லை எனில், அவர் தற்போது எங்கு இருக்கிறார்? என்பது குறித்த தகவல் காவல்துறையினருக்கு அனுப்பப்படும். மேலும் பெண்கள், தங்களுக்கு ஆபத்து நேரும் சமயத்தில், அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்த வேண்டும். அது காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.