Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படகு இல்லமா இது…? ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலையில் படகு இல்லம் மாறிவிட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகு இல்லம் மூடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கக்கன் காலனியில் இருந்து படகு இல்லத்திற்கு வரும் நீரில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், படகு இல்லம் குப்பைத் தொட்டியாக மாறியது. அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் அப்படியே தேங்கி கிடக்கின்றன. இதனால் மாசடைந்த நீரில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, வால்பாறை நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் படகு இல்லத்தில் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை என கூறியுள்ளனர். மேலும் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளால் படகு இல்லத்தை சுற்றுலா பயணிகள் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |