விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சவுதி அரேபியாவில் உள்ள ஜசன் நகரில் கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இது ஏமன் நாட்டின் எல்லையோரப் பகுதியாகவும் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இன்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது அந்த விமான நிலையம் மீது டிரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெடிகுண்டை விமான நிலையத்தில் இருந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அளித்துள்ளது.
இருந்தாலும் சில குண்டுகள் விமான நிலையம் மீது விழுந்துள்ளன. இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 6 பேர் சவுதி அரேபியாவையும், 3 பேர் வங்காளதேசத்தையும், ஒருவர் சூடான் பகுதியையும் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் ஷவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சவுதி அரேபிய அரசு, ஊடகங்கள் குற்றம்சாட்டி உள்ளதாக கூறப்படுகிறது.