உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடருக்கு தகுதிபெற்றுள்ளார்.
டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவின் சென்ஷைன் நகரில் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா ஆடினார்.இதன் முதல் செட் ஆட்டத்தில் கரோலினா அதிரடியாக ஆட இதனை எதிர்பார்த்திராத ஆஷ்லி பார்ட்டி சற்று தடுமாறினார். இதனால் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் கரோலினா கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் போட்டியில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லி 6-2 என கைப்பற்ற, ஆட்டம் பரபரப்பானது. இறுதியாக வெற்றியாளர் யார் என தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் நடைபெற்றது. இந்த செட்டில் தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய ஆஷ்லி, எளிதாக புள்ளிகளைப் பெற்றார். இறுதியாக 6-3 என்ற கணக்கில் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி, டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார்.இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து உக்ரேனிய வீராங்கனை ஸ்விட்டோலினா ஆடவுள்ளார்.
👏👏 Onto the finals! @ashbarty defeats Pliskova in three sets, 4-6, 6-2, 6-3, advancing to the finals of the Shiseido @WTAFinals Shenzhen pic.twitter.com/bHGu63rNeG
— wta (@WTA) November 2, 2019