உணவு தானியங்களை இந்தியாவிடம் நன்கொடையாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பன்னாட்டு நிதியம் அமைப்பும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்களது உதவியை நிறுத்திக் கொண்டதால் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த 3 ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட பஞ்சம் மற்றும் உள்நாட்டுப்போரினால் உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பின் இயக்குனரான மேரி எலன் மெக்ரோட்டி தெரிவித்துள்ளார்.
அதிலும் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 75,000 டன் கோதுமைகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனை பாகிஸ்தானின் தரைவழி மார்க்கமாக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கப்பல் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு தரைவழி மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை நன்கொடையாக வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மேரி தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு ஆப்கானில் 25,00000 டன் அளவிற்கு உணவு தானியங்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.