Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்யும் கனமழை…. தண்டோரா மூலம் தகவல்….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

தொடர்ந்து பெய்யும் கனமழையால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநில பகுதிகள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பாலாறு மற்றும் பொன்னையாறு கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றின் அருகாமையில் நின்று வேடிக்கை பார்க்கவோ அல்லது குளிக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி தண்டோரா மூலமாக தகவல் அளிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |