Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வு…. வயதுவரம்பு குறித்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து  அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணி புரிய ஆசிரியர் தேர்வு மையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் பணிக்கு பொது பிரிவிற்கு 40 வயது மற்றும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிரியர் பணி தேர்விற்க்கான செய்தி  வெளியிடப்பட்டு அதில் வயது வரம்பு கூறப்பட்டிருந்தது. இதனால் வயதுவரம்பு திட்டத்தை எதிர்த்து 18 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வுக்கு 57 வயதில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசு 2022ஆம் ஆண்டு தேர்வு எழுதுவோரின் வயதை பொதுப்பிரிவினருக்கு 40 வயது மற்றும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 வயது என நிர்ணயம் செய்துள்ளது.

இதனால் 45 வயதைக் கடந்தவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதால் வயது வயதுவரம்பு ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் டி. எஸ்.சிவஞானம் மற்றும் சத்தியகுமார் ஆகியோர் அமர்வில் இருந்தனர். ஆசிரியர் தேர்வு மையம் சார்பில் வழக்கறிஞர் நீலகண்டம் மற்றும் அரசு சார்பில் பீளீடர் முத்துக்குமார் ஆகியோர்கள் ஆஜராகி உள்ளனர்.

அதன்பிறகு வழக்கு தொடர்ந்து நீதிபதி இரு தரப்பில் இருந்த வாதங்களையும் கேட்டு முடித்தார். அதன்பிறகு தேசிய நீதிபதிகள், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை அரசு தான் நிர்ணயித்துள்ளது எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

Categories

Tech |