Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாக்கு சொல்ல வேண்டாம்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. கலெக்டரின் தகவல்….!!

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் மாவட்ட கலெக்டர் நிபுணர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 10,6,677 நபர்களில் 5,18,000 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அதன்பின் தற்போது 50 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. இதனை அடுத்து 1,30,000 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செதுக்கப்பட்டிருக்கிறது. இதில் 12 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது.

இம்மாவட்டத்தில் 73,123 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் முடிந்தும் ஊசி போடாமல் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். அதனால் அவர்களை முதல் தவணை ஊசி செலுத்தும் இடத்திலேய இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளலாம் எனவும், இரண்டு தவணை  தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் முற்றிலுமாக நோயிலிருந்து விடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து ஏதேனும் காரணம் சொல்லி தடுப்பூசி போடாமல் இருக்க கூடாது எனவும், பின் மாபெரும் முகாம்கள் 630 இடங்களிலும் இம்முறையும் நடைபெற இருக்கிறது. இதில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் போடாதவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கையிருப்பில் இருக்கும் 95,000 தடுப்பூசிகள், 5-ஆம் கட்ட முகாமில் செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |