Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மீதான வழக்கு…. இடைக்கால தடை உத்தரவு…!!!

சட்டமன்ற தேர்தலின் போது நடந்த தகராறின் காரணமாக சேகர்பாபு உள்ளிட்டோரின் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சட்ட மன்றத் தேர்தலானது கடந்த கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது அதிமுகவினரிடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக சேகர்பாபு உள்ளிட்டோர் மீது கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கானது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதன் பின்னர்  பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் நேரில் ஆஜராகுவதற்கு சேகர்பாபு உள்ளிட்டோருக்கு விலக்கு அளித்தும்,  விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |