Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து…. கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு…. போலீசார் அதிரடி!!

தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்கும் குணசேகரன்(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி(22)  என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 3ஆம் தேதி தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது..

இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில், ஒரு பெண்மணி பாதுகாப்பாக இருந்துள்ளார்.. இந்தப் பெண்மணி தாமாக முன் வந்து குழந்தையை பார்க்கும் பணியை 3 நாட்கள் செய்து வந்துள்ளார்.. இந்நிலையில் நேற்று காலை அந்த குழந்தையை காணவில்லை..

இதையடுத்து சிசிடிவியை பார்த்த போது உதவி செய்து வந்த அந்த பெண் அதிகாலை கட்டை பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.. கடந்த 2 நாட்களாக நடந்து வந்த விசாரணையில், தற்போது அந்த குழந்தையை பட்டுக்கோட்டையில் மீட்கப்பட்டுள்ளது காவல்துறை.

அதாவது, அந்த பையில் எடுத்து சென்ற பெண்மணி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து நேராக ஒரு ஆட்டோவில் ஏறக்கூடிய காட்சி பதிவாகியிருந்தது.. உடனடியாக ஆட்டோ ஓட்டுனரை பிடித்து, எங்கே அந்த பெண்மணியை இறக்கி விட்டீர்கள் என்று கேட்ட போது, தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியது தெரியவந்தது..

இதனையடுத்து அந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எங்கே செல்கிறார் என்று சிசிடிவி  காட்சிகள் மற்றும் தொலைபேசி தொடர்புகளை வைத்து ஆய்வு செய்ததில் பட்டுக்கோட்டையில் இருப்பது தெரியவந்தது.. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டதுடன், கடத்திச்சென்ற அந்த பெண்மணியையும் கைது செய்துள்ளனர்.. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது..

Categories

Tech |