சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புக்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தனது பயணத்தின்போது பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் முதல்வர் வாகனத்துடன் மற்ற வாகனங்களும் (மக்களுடன் மக்களாக) சேர்ந்தே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.