Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 QUALIFIER 1: இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் ….? டெல்லி VS சென்னை நாளை மோதல் …..!!!

2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல்  தகுதிச்சுற்றில் டெல்லி -சென்னை அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இதனிடையே மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் லீப் சுற்றுக்கள் நிறைவடைந்தன. இதில் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது .இதனிடையே சிஎஸ்கே ,டெல்லி கேப்பிடல்ஸ் , ஆர்சிபி மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இதனிடையே நாளை நடைபெறும் முதல் தகுதிசுற்று ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி அணியும், 2-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதேசமயம் தோல்வியடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படும் .இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது .இதையடுத்து நாளை மறுநாள் அதாவது 11-ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில்  புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணியும் ,4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுகின்றன இதில் தோல்வியடையும் அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேறும் .இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வியடையும் அணியுடன் 2-வது தகுதிசுற்றில் விளையாடும். இப்போட்டி 13ஆம் தேதி நடைபெறுகிறது .இதையடுத்து இறுதி போட்டி வருகின்ற 15-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

Categories

Tech |