திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷிற்கு பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் செப்டம்பர் 19-ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் தொழிற்சாலையில் மர்மமான முறையில் உயிர்யிழந்துள்ளார். இதுகுறித்து காடாம்புலியூர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நேரத்தில் அவரது மகனும் தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் தமிழக அரசானது இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் கோவிந்தராஜனின் பிரேத பரிசோதனையில் அவர் அடுத்துக் கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி ஆர் வி ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜர், முந்திரி தொழிற்சாலை மேலாளர் அல்லாபிச்சை, சுந்தர் என்கிற சுந்தர் ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிபிசிஐடி காவல்துறையினர் டி.ஆர்.வி.ரமேஷ் எம்.பியை தவிர மற்ற 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்த ஐந்து பேரிடமும் நள்ளிரவு 12 மணிவரை விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் எம் பி ரமேஷ் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் இந்த கொலை வழக்கில் நேரடியாக கடலூர் எம்பி ரமேஷ் சம்பந்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இவரை இரு வாரங்களுக்கு முன்பே திமுக தலைமையானது ராஜினாமா செய்துவிட்டு, சட்டப்படி வழக்கை எதிர் கொள்ளுமாறு கூறி உள்ளது. எனவே கூடிய விரைவில் தலைமறைவாக உள்ள ரமேஷ் கைது செய்யப்படுவார் என்று கருதப்படுகிறது.