Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கும் உண்டு…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. கலெக்டரின் தகவல்….!!

விவசாயிகள் அனைவரும் சம்பா பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக அவர்களின் இழப்பீடுகளை சரி செய்வதற்கு காப்பீடு திட்டத்தின் கிழாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பகுதிகளில் சம்பா நெல்களை பயிரிட்டிருக்கும் விவசாயிகள் இந்த காப்பீடை பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு 472 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், அரசு பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிட்டா, விலாசம், நிலப்பரப்பு, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, உட்பிரிவு, சர்வே எண், விவசாயிகள் பெயர், பயிரிடப் பட்டிருக்கும் நிலம் இருக்கும் கிராமம் ஆகியவை அடங்கிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |