கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்த ஒரு வருடமாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக தங்கள் வேலையையும் தூக்கி எறிந்து உள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி கிரிஷன் என்ற தம்பதியினர் அன்றாட வேலையை விட்டுவிட்டு நாடு முழுவதும் பயணம் செய்ய முடிவு செய்தது அதை ஒரு வருடமாக வெற்றிகரமாக தொடர்ந்தும் வருகின்றனர். தங்கள் குடும்பங்களின் ஆதரவை பெறவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்த சாலை பயணம் எளிமையானதாகவும் எளிதாகவும் இருக்க வேண்டுமென முடிவு செய்துள்ளனர். இதற்காக இவர்கள் காரின் வடிவமைப்பு முதற்கொண்டு மாற்றியுள்ளனர். குடிப்பதற்கு பத்து லிட்டர் தண்ணீர் கேன்கள் 3 இரவில் தூங்குவதற்கு படுக்கையுடன் கூடிய கார் என குறைந்த பட்ஜெட்டில் இவர்கள் பயணத்தை தொடர வேண்டும் என்பதற்காக மலிவு விலை மலிவான விலையில் கிடைக்கக்கூடிய உணவுகளிலேயே சாப்பிட்டு வந்துள்ளனர்.
மேலும் உணவு கிடைக்காத பட்சத்தில் அவர்களை சமைக்கவும் செய்துள்ளனர்.இவர்கள் சமைப்பதற்கு 5 கிலோ எரிவாயு சிலிண்டர் மற்றும் ஒரு பர்ணர் அடுப்பும் வைத்துள்ளனர். 2020 அன்று திட்டமிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியே பயணம் செய்து பெங்களூரு உடுப்பி கோகர்ணா மும்பை போன்ற நகரங்களை கடந்து சென்றுள்ளனர். இவர்கள் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் வரை சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.