திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம், துவாக்குடி இமானுவேல் நகர், எழில் நகர், ஆகிய பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகள் இருந்ததன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மின்சார வாரியத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும், துவாக்குடி இமானுவேல் நகர் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும்,எழில் நகர் பகுதியில் 3.97 லட்சம் மதிப்பீட்டில் 63kav/11kv மின்மாற்றிகள் மின்சார வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார். மேலும் ஓசூர், தேனீர் பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச மின்சார உபயோகத்திற்கான ஆணையத்தையும் அவர் வழங்கினார்.