2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடைய சொத்துக்களை முடக்க கூடிய நடவடிக்கைகள் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் கூட பினாமி சட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் பையனூர் பங்களா சொத்தை வரி வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் இதுவரை 2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கம் செய்தவருமான துறை அதிகாரிகள், தற்போது கொடநாடு எஸ்டேட் மற்றும் கர்சன் எஸ்டேட் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து நடவடிக்கை மேற் கொண் டிருக்கிறார்கள். வருமான வரித்துறைக்கு வரி பாக்கி இருக்கக் கூடியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக இந்த இரண்டு கணக்குகள் முடக்கம் இருப்பதாக வங்கி வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.