கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் குவிவதால் மனம் தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவிகளால் தன்னம்பிக்கை கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற கடுமையாகவும் உழைப்பீர்கள். குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். ஆடை ஆபரணம் அலங்காரத்தையும் இன்று விரும்புவீர்கள். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். வீண் மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு பிறக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதங்கள் நடக்கும் இடங்களில் நிற்பதும் நல்லது இல்லை. அது போலவே யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்யாதீர்கள். அது போதும்.
இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கலகலப்பும் இருக்கும். வெளியூர் பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் படிப்படியாக குறையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்