Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “பேச்சால் காரியத்தை சாதிப்பீர்கள்”… எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே.!! இன்று உறவினர் வருகையால் மனம் மகிழும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். அரசாங்கத்தால் லாபமும் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் சகஜ நிலை திரும்பும். மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் மட்டும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் செலவை குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களிளுமே இன்று வெற்றி வாய்ப்புகள் இருக்கும். பிடிவாதத்தை விடுவது நன்மையை கொடுக்கும். அறிவுத்திறன் கூடும். பணவரவு நல்லபடியாகவே கிடைக்கும்.

தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பிரச்சனைகளில் இருந்து விடுபட கூடிய நாளாகவும் இன்று இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களிடம் அன்பும் பாராட்டும் கிடைக்கக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு

அதிஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |